காந்தி மியூசியத்தில் அருங்காட்சியக ஆணையர் ஆய்வு
மதுரை காந்தி மியூசியத்தில் அருங்காட்சியக ஆணையர் ஆய்வு செய்தார்.;
மதுரை,
மதுரை காந்தி மியூசியத்தில் தமிழக அரசு சார்பில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை, அரசு அருங்காட்சியக ஆணையர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ், அரசு அருங்காட்சியக உதவி இயக்குனர் சுந்தர்ராஜன், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன், ஆர்க்கிடெட் ஷோபனா, காந்தி நினைவு அருங்காட்சியக காப்பாட்சியர் நடராஜன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.