ரவுடி அடித்துக்கொலை
தாயை திட்டியதால் ஆத்திரம் அடைந்தவர் ரவுடியை அடித்துக்கொலை செய்தார்.
தேவகோட்டை,
தாயை திட்டியதால் ஆத்திரம் அடைந்தவர் ரவுடியை அடித்துக்கொலை செய்தார்.
ரவுடி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கள்ளிவயல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). பிரபல ரவுடி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கண்ணன்(44). கண்ணனின் தாயார் குஞ்சரம்(70) என்பவரை கணேசன் குடிபோதையில் திட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்த கண்ணன் ஆத்திரம் அடைந்தார். பின்னர் நேற்றுமுன்தினம் இரவு கணேசன் அவரது வீட்டின் முன்பு வெளியே படுத்திருந்தார். அங்கு குடிபோதையில் வந்த கண்ணன் அவரை பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. உடனே அவர் அங்கு கடந்த உருட்டுக்கட்டையை எடுத்து கணேசன் தலையில் அடித்து கொலை செய்தார்.
பின்னர் கண்ணன் போதையில் பக்கத்தில் படுத்து தூங்கி விட்டார். அக்கம் பக்கத்தினர் காலையில் அந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கைது
இதுகுறித்து ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.