காமராஜர் சிலைக்கு, முனிரத்தினம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்

சோளிங்கரில் காமராஜர் சிலைக்கு, முனிரத்தினம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-07-17 18:47 GMT

சோளிங்கரில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பஸ் நிலைய பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. சோளிங்கர் காங்கிரஸ் நகர தலைவரும், சோளிங்கர் நகரமன்ற உறுப்பினருமான டி.கோபால் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ரகுராம்ராஜூ, சோமசமுந்தரம் குமார், சோளிங்கர் ஒன்றியக் குழு உறுப்பினர் செங்கல்நத்தம் முனியம்மாள் பிச்சாண்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கேசவனாங்குப்பம் தாசரதி, வாங்கூர் அம்சவேணி பெரியசாமி, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்