குளச்சல்,
குளச்சல் நகராட்சி கூட்டம் ேநற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைக்கவில்லை எனக்கூறி நகராட்சி தலைவர் நசீர் கூட்டத்தை ஒத்தி வைத்தார். இதையடுத்து நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் நசீர் தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) ஜுவா, மேலாளர் பிரேமா, துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி தோழமை காலனியில் ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு குழந்தைகள் பயன்பெறும் வகையில் குழந்தைகள் பூங்கா அமைப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் ரகீம், ஆறுமுகராஜா, ஜாண்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.