அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவுக்கு நகராட்சி சமுதாயக்கூடம்

சோளிங்கர் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவுக்கு நகராட்சி சமுதாயக்கூடத்தை வழங்க நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-21 17:32 GMT

சோளிங்கர் நகராட்சி அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார். இதில் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு தற்போது புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் புறநோயாளிகள் பிரிவை நகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் நடத்திக்கொள்ள மன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு எந்தவிதமான கட்டணமும் இன்றி வழங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் எம்.இ.ஆஞ்சநேயன், ஏ.எல்.மணிகண்டன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்