பணிமனை ஊழியரை தாக்கிய மாநகர பஸ் டிரைவர் கைது
தண்டையார்பேட்டை பணிமனை ஊழியரை தாக்கிய மாநகர பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.;
திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 52). மாநகர பஸ் டிரைவர். இவர், தண்டையார்பேட்டை பணிமனையில் வேலைப்பார்த்து வருகிறார். இவர், தன்னுடைய நண்பர் ராமு (47) என்பவருடன் சேர்ந்து தண்டையார்பேட்டை பணிமனை கிளார்க் ஆறுமுகம் (55) என்பவரிடம் விடுமுறை கேட்டார்.ஆனால் ஆறுமுகம் விடுமுறை தர மறுத்ததால் இருவரும் சேர்ந்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.