மாதவரம் மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி தணிக்கை தலைவர் ஆய்வு

மாதவரம் மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி தணிக்கை தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2023-06-16 17:00 GMT

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மாதவரம் மண்டலத்தில் சென்னை மாநகராட்சியின் தணிக்கை குழு தலைவர் தனசேகரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து வரி வசூல் துறை சம்பந்தமாக தணிக்கை செய்தார் இதில் விடுப்பட்ட வரி வசூலை உடனடியாக வசூல் செய்ய வேண்டும் எனவும் வணிக வளாகங்களை சரியாக வரையறுத்து வரி வசூல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார் விடுபட்ட கணக்குகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார் கூட்டத்தில் மண்டல குழு தலைவர் எஸ் நந்தகோபால் ஆணையர் பிரகாஷ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்