முனீஸ்வரசாமி கோவில் திருவிழா

நாகூர் வடக்கு பால்பண்ணைச்சேரி முனீஸ்வரசாமி கோவில் திருவிழா நடந்தது.;

Update: 2022-08-27 17:35 GMT

நாகூர்:

நாகூர் வடக்கு பால்பண்ணைச்சேரி முனீஸ்வரசாமி கோவில் திருவிழாகடந்த 19-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு மஞ்சள் பொடி,மாப்பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேக, ஆராதனையும் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்