தேவாலய திருவிழாவை முன்னிட்டு மும்பை - வேளாங்கண்ணி சிறப்பு ரெயில்
வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவை முன்னிட்டு மும்பை - வேளாங்கண்ணி இடையே லோக்மான்ய சிறப்பு ரெயிகள் இயக்கப்பட உள்ளது.;
சென்னை,
வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவை முன்னிட்டு மும்பை - வேளாங்கண்ணி இடையே லோக்மான்ய சிறப்பு ரெயிகள் இயக்கப்பட உள்ளது. வரும் 26-ந்தேதி மதியம் 1 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண். 01161) அடுத்த 3-ம் நாள் இரவு 10.35 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். இதேபோல, மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்டு 28-ந்தேதி காலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (01162) அடுத்த நாள் மாலை 4.30 மணிக்கு மும்பையை சென்றடையும்.
இதேபோல, அடுத்த மாதம் 6-ந்தேதி மதியம் 1.40 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (01163) அடுத்த 3-ம் நாள் நள்ளிரவு 12.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். இதேபோல, மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து அடுத்த மாதம் 8-ந்தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (01164) அடுத்த 3-ம் நாள் காலை 7 மணிக்கு மும்பையைச் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.