சுற்றுச்சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மும்பை ஒவிய கல்லூரி மாணவர்
சுற்றுச்சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மும்பை ஒவிய கல்லூரி மாணவர் 16 மாநிலங்களை கடந்து மாமல்லபுரம் வந்தார்.;
மராட்டிய மாநிலம் மும்பை ஓவியக்கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர் பிரதீக்ஜாதவ் (வயது 26). சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் காற்று மாசு ஏற்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், பிளாஸ்டிக் மற்றும் எரிபொருள் நிரப்பிய வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கவும் வலியுறுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மும்பையில் தொடங்கினார். இந்த நிலையில் இவர் குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 16 மாநிலங்கள் வழியாக 17 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து தமிழகத்திற்கு வந்தார். நேற்று மாமல்லபுரம் வருகை தந்தார்.
ஓவிய கல்லூரி மாணவர் பிரதீக்ஜாதவ் கூறும்போது:-
சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசு ஏற்பட்டு வருவதாகவும், அதனால் பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சைக்கிள் பயன்படுத்துங்கள் என்ற கருத்தை வலியுறுத்தி தான் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.