மூலனூரில் நடந்த விழாவில் 63 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1கோடியே 1 லட்சத்திற்கான கடன் தள்ளுபடி சான்றிதழ்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினர்.
கடன் தள்ளுபடி சான்றிதழ்
கூட்டுறவுத் துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடனுக்காக தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா மூலனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவர் இல. பத்மநாபன், முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார்.
இதில் தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த 63மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 538 பேருக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்திற்கான கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினர்.
கலந்து கொண்டவர்கள்
தாராபுரம் சரக துணை பதிவாளர் மணி விழாவில் மூலனூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்தி, மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ், தாராபுரம் வட்டாட்சியர் ஜகஜோதி, நில வருவாய் ஆய்வாளர் செல்வி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய் துறையினர் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட