ராமேசுவரம் பகுதியில் முளைப்பாரி திருவிழா

ராமேசுவரம் பகுதியில் முளைப்பாரி திருவிழா

Update: 2023-09-07 19:08 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமதீர்த்தம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா கடந்த 29-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில் முளைப்பாரி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முளைப்பாரியை கடலில் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ராம தீர்த்தம் பகுதியில் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த முத்துமாரியம்மனுக்கு சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கோவில் முன்பாக அனைத்து முளைப்பாரிகளும் வைக்கப்பட்டு அந்த முளைப்பாரியை சுற்றியபடி ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடியபடி கும்மி அடித்து சுற்றி வந்தனர். பின்னர் பெண்கள் ஒவ்வொருவரும் முளைப்பாரியை தங்கள் தலையில் வைத்தபடி ராமதீர்த்தம் பகுதியில் இருந்து ஊர்வலமாக திட்டக்குடி சாலை மற்றும் கோவில் ரதவீதி சாலை வழியாக அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்று கடலில் கரைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்