முளைப்பாரி திருவிழா

முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-09-19 18:45 GMT

முதுகுளத்தூர்

முதுகுளத்தூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவையொட்டி ஐந்தொழிலாளர்கள் இளைஞர் சங்கம் சார்பில் முளைப்பாரி விழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள், பொங்கல் வைத்தல், விளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து பொதுமக்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முதுகுளத்தூர் ஆசாரி தெருவில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பின்னர் முளைப்பாரியை வடக்கூர் முருகன் கோவில் அருகில் உள்ள ஊருணியில் கரைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்