மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது

ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-08 20:22 GMT

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு போலீசார் சம்பவத்தன்று தென்னமநாடு பைபாஸ் சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தென்னமநாடு தெற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் இளையராஜா (வயது35) என்றும், இவர் ஒரத்தநாடு மற்றும் மருங்குளம் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு போலீசார் இளையராஜாவை கைது செய்து அவரிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களைபறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்