வஉசி 150வது நினைவு தினத்தை முன்னிட்டு நகரும் புகைப்பட கண்காட்சி

தூத்துக்குடியில் வஉசி 150வது நினைவு தினத்தை முன்னிட்டு நகரும் புகைப்பட கண்காட்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.;

Update:2022-06-07 20:29 IST

தூத்துக்குடி:

விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் நகரும் புகைப்பட கண்காட்சி பஸ்சை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பஸ் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று விட்டு, தூத்துக்குடி மாவட்டத்தை வந்தடைந்தது. தொடர்ந்து 2 நாட்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்