பொதுமக்களை அச்சுறுத்திய மலைத்தேனீக்கள் அகற்றம்
பிலிக்கல்பாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய மலைத்தேனீக்களை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.;
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே சின்னமருதூர் காலனி பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. அந்த மரத்தின் மேல் இருந்த மலைத்தேனீக்கள் அந்த வழியாக சென்று வந்த பொதுமக்களை கொட்டி அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னமருதூர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு மரத்தில் உள்ள மலைத்தேனீக்களை அகற்றக்கோரி தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் மரத்தில் கூடுகட்டி இருந்த மலைத்தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர். மலைத்தேனீக்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.