சாலையில் புழுதி மணல் பறப்பதால் வாகனஓட்டிகள் அவதி

வேதாரண்யம் பகுதியில் சாலையில் புழுதி மணல் பறப்பதால் வாகனஓட்டிகள் அவதி

Update: 2023-09-29 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் நான்கு வீதிகளிலும் மழை நீர் வடிகால் பணி நடந்து வருகிறது. அதற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு நான்கு வீதிகளிலும் மணல் குவியலாக காணப்படுகிறது. தற்சமயம் பருவம் தவறி வீசும் காற்று, அதாவது ஆடி மாதம் வீசவேண்டிய காற்று புரட்டாசி மாதத்தில் வீசி வருகிறது. ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். தற்போது மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு நான்கு வீதிகளிலும் மணல் குவியலாக காணப்படுவதால் கடுமையாக வீசும் காற்றால் அந்த பகுதி முழுவதும் புழுதி மணல் பறக்கிறது. இதனால் நான்கு வீதிகளிலும் உள்ள கடைகளில் உள்ள பொருட்களில் தூசு படிந்து பொருட்கள் வீணாகிறது. அதே போல் சாலையோர திறந்தவெளியில் உணவு தயாரிக்கும் உணவுகளில் மண் படிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்களும் இந்த சாலையில் புழுதிமண் பறப்பதால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் உள்ள மணல்குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்