தவறாக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையால் தடம் மாறி செல்லும் வாகன ஓட்டிகள்

வி.கைகாட்டியில் உள்ள திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தவறாக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையால் தடம் மாறி வாகன ஓட்டிகள் ெசன்று வருகிறார்கள். எனவே அந்த பெயர் பலகையை முறையான இடத்தில் வைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-06-04 00:00 IST

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த வழித்தடத்தில் கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, பாண்டிச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு அதிவிரைவு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் ஆங்காங்கே ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

பெயர் பலகை

வி.கைகாட்டியை அடுத்த தேளூர் கயர்லாபாத் போலீஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விளாங்குடியில் இருந்து வரும் போது வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இடதுபுறம் சென்றால் முத்துவாஞ்சேரி, நேராக சென்றால் திருச்சி, வலது புறம் சென்றால் பெரம்பலூர் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் 1 கி.மீ. தூரம் சென்று வி.கைகாட்டியில் இருந்து வலது புறம் சென்று பெரம்பலூர் செல்ல வேண்டும்.

ஆனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் பெரம்பலூர் செல்வதற்கு சிறிது தூரத்தில் சென்று வலது புறம் தேளூர் கிராமத்திற்கு சென்று பல கி.மீட்டர் தூரம் சென்று விடுகின்றனர். அதேபோல நாள்தோறும் புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் ஏராளமானோர் தவறாக சென்று விடுகின்றனர் என பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு பெரம்பலூர் குறிப்பிட்டுள்ள பெயரை முறையான இடத்தில் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்