மோட்டார் சைக்கிள் திருடியவருக்கு 2 ஆண்டு சிறை
மோட்டார் சைக்கிள் திருடியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
சிவகாசி,
சிவகாசி காந்திநகரை சேர்ந்தவர் கோயில்ராஜ் ஐசக் (வயது 46). இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 28.1.2020-ந் தேதியன்று சிவகாசி பஸ் நிலையம் அருகில் நிறுத்தி இருந்தார். மறுநாள் வந்து பார்த்தபோது மோட்ார் சைக்கிள் மாயமானது தெரியவந்தது. இதை தொடர்ந்து கோயில்ராஜ் ஐசக் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தங்கபாண்டி (22) என்பவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிவகாசி கோர்ட்டில் நடைபெற்றது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ராஜேஷ்கண்ணன், மோட்டார் சைக்கிளை திருடிய தங்கபாண்டிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.