மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ரத்தினகிரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையினான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆற்காட்டில் உள்ள கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 41) என்பதும், இவர் ரத்தனகிரி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.