மோட்டார் சைக்கிள் திருட்டு கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமி சிக்கினார்
அருமனை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமி சிக்கினார்
அருமனை,
அருமனை அருகே உள்ள கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் அல் அமீன். இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அல் அமீன் கடையாலுமூடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்ேபாது சாலையில் சுற்றி திரிந்த மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி கேரளாவுக்கு தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.