மோட்டார் சைக்கிள் திருட்டு
பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் திருடு போனது.;
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் சிவபார்வதிநாதன். இவர் தனது மோட்டார் சைக்கிளை பாவூர்சத்திரத்தில் மெயின் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ கோவில் முன்பு நிறுத்தி வைத்துவிட்டு, கோவிலுக்கு சென்று வந்துள்ளார். அப்போது அங்கு நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.