மோட்டார் சைக்கிள் திருட்டு

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-10-15 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வைரமுத்து (வயது 27). பட்டதாரியான இவர் அரசு பணிக்கான போட்டித்தேர்வுக்கு படித்து வருகிறார். சம்பவத்தன்று வைரமுத்து சங்கரன்கோவில் ரெயில் நிலையம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் ெரயில்நிலைய வளாகத்துக்கு சென்று போட்டித்தேர்வுக்கு படித்து விட்டு திரும்பி வந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வைரமுத்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்