மோட்டார் சைக்கிள் திருட்டு

நெல்லை அருகே வீட்டு முன்பு நின்ற மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்று விட்டார்.

Update: 2022-09-05 19:32 GMT

நெல்லையை அடுத்த சிவந்திபட்டி குத்துக்கல் அருகே உள்ள ஸ்ரீராமன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகபாண்டி மகன் மகாராஜா (வயது 31). இவர் தனது மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து மகாராஜா சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்துபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்