தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது52). வக்கீல். இவர் சம்பவத்தன்று காலை ஒரத்தநாட்டில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.