லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வக்கீல் சாவு
நாமகிரிப்பேட்டை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில்வக்கீல் பரிதாபமாகஇறந்தார்.;
நாமகிரிப்பேட்டை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில்வக்கீல் பரிதாபமாகஇறந்தார்.
வக்கீல்
ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 65). வக்கீலான இவர், விவசாயமும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராமநாதன் மெட்டாலாவில் இருந்து சிங்களாந்தபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அவர் ராசிபுரம்- ஆத்தூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது நாமகிரிப்பேட்டை அருகே கட்டை புளியமரம் என்ற இடத்தில் நின்ற டிப்பர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
பரிதாப சாவு
இதில் படுகாயம் அடைந்த ராமநாதன் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கிய ராமநாதனை மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமநாதன் பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் இறந்த ராமநாதன் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பழுதான லாரி
டிப்பர் லாரி பழுதாகி இருந்ததால் கிரேன் மூலம் புதுச்சேரியில் இருந்து கரூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது டிரைவர் அதனை சாலையோரம் நிறுத்தி இருந்ததும், மோட்டார்சைக்கிளில் வந்த ராமநாதன், இதனை கவனிக்காமல் லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.