கோத்தகிரியில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி=ஒருவர் படுகாயம்
கோத்தகிரி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
லாரி மீது மோதல்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் அருகே உள்ள காளவாய் பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவரது மகன் ரியாஸ் (வயது 18). இதே போல கீ ஸ்டோன் பகுதியை சேர்ந்த சார்லஸ் என்பவரது மகன் மேத்யூ ( 28). இருவரும் நண்பர்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணிக்கு நண்பர்களிருவரும் மிஷண் காம்பவுண்ட் அருகே ரியாசின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பலமாக மோதியது.
வாலிபர் பலி
இந்த விபத்தில் ரியாஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதபமாக உயிரிழந்தார். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த மேத்யூவை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.