காரின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
பணகுடியில் காரின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.;
பணகுடி:
மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த நாராயணன் மகன் இசக்கிமுத்து (வயது 21). இவர் அதே ஊரை சேர்ந்த மாடசாமி மகன் கோமதிநாயகம் என்ற சுந்தர் (20) என்பவருடன் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பணகுடி நான்கு வழிச்சாலை வடக்கு மேம்பாலத்தில் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற காரின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே இசக்கிமுத்து பலியானார். படுகாயம் அடைந்த சுந்தர், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.