மோட்டார்சைக்கிள்-பஸ் மோதல்; பாலிடெக்னிக் மாணவர் பலி

புளியங்குடி அருகே, மோட்டார்சைக்கிள்-பஸ் மோதியதில் பாலிடெக்னிக் மாணவர் இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.;

Update: 2022-12-27 18:45 GMT

புளியங்குடி:

புளியங்குடி அருகே, மோட்டார்சைக்கிள்-பஸ் மோதியதில் பாலிடெக்னிக் மாணவர் இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

மாணவர்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள மலையடிகுறிச்சி அம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன். இவருடைய மகன் பூலித்துரை (வயது 20).

இவர் புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் மாதேஷ்.

நேற்று மதியம் இருவரும் மோட்டார்சைக்கிளில் தலைவன்கோட்டையில் இருந்து மலையடிகுறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சாவு

வரும் வழியில் வாசுதேவநல்லூரில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சும், பூலித்துரை சென்ற மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பூலித்துரை பரிதாபமாக இறந்து போனார்.

மாதேஷ் படுகாயம் அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் விரைந்து சென்று பூலித்துரை உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாதேஷ் சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்