மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம்

கயத்தாறில் மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மூன்று வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2022-06-15 14:03 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே மூர்த்தீஸ்வரம் காலனி தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மாரிமுத்து (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளுக்கு உதிரி பாகங்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சேலம் மாவட்டம் அழகப்பாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் மணிகண்டன் (25) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவருடன் அய்யனாரூத்து முத்துப்பாண்டி மகன் சண்முகையா(30) மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து சென்றார். கயத்தாறு பஜாரில் சென்றபோது, மாரிமுத்து மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் சண்முகையா ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் இருந்த மாரிமுத்து, சண்முகையா, மணிகண்டன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்