மோட்டார் சைக்கிள் மோதி மீன் வியாபாரி பலி
திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மீன் வியாபாரி உயிரிழந்தார்.
ஒரத்தநாடு;
திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மீன் வியாபாரி உயிரிழந்தார்.
மீன் வியாபாரி
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வில்லுவிட்டு விடுதி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது46). மீன் வியாபாரியான இவர் கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு திருவோணத்துக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திருவோணம் அரசு ஆஸ்பத்திரி பிரிவு சாலை அருகே பாஸ்கர் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பாஸ்கர் மீது மோதியது.
பரிதாப சாவு
இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் இறந்தார். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.