பாலத்தின் தடுப்புசுவரில் கார் மோதி தாய், மகன் பலி

சின்னசேலம் அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகன் இருவர் பரிதாபமாக இறந்தனர். சாலையின் குறுக்கே நாய் வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது;

Update: 2023-01-18 18:45 GMT

சின்னசேலம்

சேலத்தை சேர்ந்தவர்கள்

சேலம் மாவட்டம், ரோம் நகர், பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜேரோம்(வயது 50). இவர் கடந்த 16-ந் தேதி தனது மனைவி கர்லினா(43) மகன்கள் ஆண்டோ கிறிஸ்ட்(14) ஆலின்ப்ரட்ரிக்(12) ஆகியோருடன் காரில் புதச்சேரிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். காரை ஜேரோம் ஓட்டினார்.

சின்னசேலம் அருகே தாகம் தீத்தாபுரம் தனியார் பள்ளி அருகில் வந்தபோது திடீனெ சாலையின் குறுக்கே நாய் வந்தது. இதனால் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக ஜேரோம் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

தாய், மகன் சாவு

இதில் படுகாயம் அடைந்த கர்லினா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஜேரோம், ஆண்டோ கிறிஸ்ட், ஆலின்ப்ரட்ரிக் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஆண்டோ கிறிஸ்ட் பரிதாபமாக இறந்தான்.

முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு ஜேரோம், ஆலின்ப்ரட்ரிக் இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்