தாய்-மகன் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கி சாவு

மோட்டார்சைக்கிளை நிறுத்த பிரேக் பிடித்தபோது நிலைதடுமாறி விழுந்த தாய்-மகன் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாயினர்.

Update: 2023-08-05 18:18 GMT

ஆம்பூர்

மோட்டார்சைக்கிளை நிறுத்த பிரேக் பிடித்தபோது நிலைதடுமாறி விழுந்த தாய்-மகன் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாயினர்.

கல்லூரி மாணவர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் டில்லி பாபு. இவரது மனைவி சரிதா (வயது 40). இவர்களது மகன் காமேஷ் (20), தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று காமேஷ் தனது தாயாரை மோட்டார்சைக்கிளில் அழைத்துக்கொண்டு மாதனூரில் இருந்து பேரணாம்பட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

மாதனூர்- ஒடுகத்தூர் நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென குறுக்கே ஒரு மோட்டார் சைக்கிள் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் காமேஷ் அதன் மீது ேமாதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது மோட்டார்சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த மினி லாரி, கீழே விழுந்த சரிதா மீது ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கிய சரிதா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காமேசும் படுகாயத்துடன் துடிதுடித்தார்.

மருத்துவமனையில் சேர்ப்பு

தகவலறிந்்த ஆம்பூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து காமேசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காமேஷ் பரிதாபமாக இறந்து விட்டார். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்