தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாதர் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் மீனா தலைமை தாங்கினார். இதில், 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து மாதர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.