சிறையில் உள்ள மகனை பார்க்க கஞ்சாவுடன் சென்ற தாய் கைது
சிறையில் உள்ள மகனை பார்க்க கஞ்சாவுடன் சென்ற தாய் கைது செய்யப்பட்டார்.;
திருச்சி துறையூர் பச்சபெருமாள்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரை பார்ப்பதற்காக அருண்குமாரின் தாய் ஈஸ்வரி (வயது 50) நேற்று முன்தினம் மாலை திருச்சி மத்திய சிறைக்கு வந்தார். அங்கு சிறையின் நுழைவு வாயிலில் நின்ற வார்டர் சண்முகசுந்தரம், ஈஸ்வரியிடம் சோதனை நடத்தினார். அப்போது அவர் 3 கிராம் கஞ்சா மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த சிறை வார்டர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈஸ்வரியை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.