தொழிலாளி கொலை வழக்கில்தலைமறைவாக இருந்த தாய் கைது

கந்தம்பாளையம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தாயை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-03-01 00:16 IST

கந்தம்பாளையம்

கந்தம்பாளையம் அருகே உள்ள வாழ்நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராணி (வயது 51). இவரது மகன் வெள்ளையன் என்கிற விஜயகுமார் (30). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (48). இவர் நாவிதர் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகுமார் ரத்தக் காயங்களுடன் சரஸ்வதி நகரில் இறந்து கிடந்தார். பின்னர் நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததின் பேரில் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராணியை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் 2 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் இருந்த ராணி நேற்று வசந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ரோந்து சென்ற போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஒப்புக் கொண்டதின் பேரில் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்