மகளுடன் தாய் கடத்தலா? போலீசார் விசாரணை

மகளுடன் தாய் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-04-19 00:56 IST

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சங்கவி(25). இவர்களுக்கு வர்ணிகா (6) என்ற மகள் இருக்கிறாள். சங்கவி வீட்டில் இருந்தபடி தையல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது சங்கவி, வர்ணிகா ஆகியோரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து சங்கவி, வர்ணிகா ஆகியோரை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்