மாதாந்திர பராமரிப்பு பணிகள்: கீழவளவு, அப்பன்திருப்பதி பகுதிகளில் மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழவளவு, அப்பன்திருப்பதி பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழவளவு, அப்பன்திருப்பதி பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்
மதுரை நாட்டார்மங்கலம், தனியாமங்கலம் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், அந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும், நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையப்பட்டி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள், கீழையூர், கீழவளவு, செமினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையப்பட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மதானபட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாளை மின்தடை
இதுபோல், மதுரை நரசிங்கம்பட்டி துணை மின் நிலையத்திலும், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் இடங்களில் மின்தடை ஏற்படும்.
அதன்படி, முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரகுண்டு, தெற்கு தெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையப்பட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, ஆலம்பட்டி, சேக்கிப்பட்டி, ஆ.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டக்குடி, சாணிபட்டி, புலிப்பட்டி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.