மாதாந்திர பராமரிப்பு பணி: விக்கிரமங்கலம்,கீழமாத்தூர் பகுதிகளில் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணியால் விக்கிரமங்கலம், கீழமாத்தூர் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-02-13 21:00 GMT

வாடிப்பட்டி

மாதாந்திர பராமரிப்பு பணியால் விக்கிரமங்கலம், கீழமாத்தூர் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

மின்தடை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதனால் விக்கிரமங்கலம், கோவில்பட்டி, பையத்தான், பாண்டியன் நகர், நரியம்பட்டி, சொக்கன் கோவில்பட்டி, கீழப்பெருமாள்பட்டி, அய்யம்பட்டி, சக்கரப்பநாயக்கனூர், மேலபெருமாள் பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிபட்டி, வடுகபட்டி, உடன்காடுபட்டி, கொடிக்குளம், திரவியம்பட்டி, ஜோதி மாணிக்கம், மம்மூட்டிபட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கீழமாத்தூர்

மேலும் சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் தேவசேரி பீடர் மற்றும் அச்சம்பத்து துணை மின் நிலையத்தில் கீழமாத்தூர் பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதனால் முடுவார்பட்டி, தேவசேரி, ஆதனூர், பண்ணைகுடி, மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, கீழமாத்தூர், மேலமாத்தூர், கொடிமங்கலம், பாறைப்பட்டி, புதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இந்த தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்