மாதாந்திர குற்ற வழக்குகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாதாந்திர குற்ற வழக்குகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-08 18:27 GMT

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாதாந்திர குற்ற வழக்குகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மற்றும் போலீஸ் துறையின் வாகன ஆய்வும் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதற்கான ஆலோசனையும் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த 31 போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு சான்றிதழை வழங்கினார். சுப நிகழ்ச்சிகளை கொண்டாடிய போலீஸ் குடும்பத்தை சேர்ந்த 90 பேருக்கு வாழ்த்து மடலை வழங்கினார். பின்னர் சங்குப்பேட்டையை சேர்ந்த இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டிற்கு தேவையான உபகரணங்ளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்