மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-10-16 18:20 GMT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பழுவூர் கிராமத்தில் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் நிலவேம்பு கசாயம் கொடுத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து, சித்த மருத்துவ அலுவலர்கள் சாகுல் ஹமீது, ஜெயலெட்சுமி ஆகியோர் கிராம மக்களை பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினர். முகாமில் மக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்