சர்க்கரை ஆலைகளில் கண்காணிப்பு குழு ஆய்வு

சர்க்கரை ஆலைகளில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.;

Update: 2023-07-21 18:39 GMT

கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் கரூர் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் புகழூர் வட்டம் திருக்காடுதுறை பகுதிகளில் உள்ள 4 சர்க்கரை ஆலைகள் மற்றும் ஒரு மரம் இழைப்பகத்தில் நேற்று சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கொத்தடிமை தொழிலாளர் எவரும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.

மேலும் இந்த இடங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் எவரும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இதுபோன்று தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் சட்டவிதிகளின்கீழ் அபராதம் அல்லது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்