கார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு

ஓசூரில் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர்.

Update: 2023-02-13 18:45 GMT

ஓசூர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு சர்ஜாபுரா பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் செபஸ்டியன் (வயது 40). தனியார் நிறுவன கோட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் காரில் ஓசூர் வந்திருந்தார். பின்னர் காரை பாகலூர் சாலையில் உள்ள ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடை முன்பு நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருக்கையில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து லாரன்ஸ் செபஸ்டியன் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்