தனியார் நிறுவன ஷட்டரை உடைத்து பணம் திருட்டு

சூளகிரியில் தனியார் நிறுவன ஷட்டரை உடைத்து பணம் திருட்டு போனது.;

Update:2022-11-20 00:15 IST

சூளகிரி:

சேலம் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஜான்பால் (வயது30). இவர் சூளகிரியில் தங்கி தனியார் பார்சல் நிறுவனத்தில் பாதுகாப்பு பிரிவு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16-ந் தேதி இரவு பணி முடிந்து அலுவலகத்தை அவர் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு அங்கு வைத்திருந்த ரூ.50 ஆயிரத்து 300 மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஜான்பால் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்