விவசாயியிடம் ரூ.4 லட்சம் மோசடி

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி விவசாயியிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-05-03 20:11 GMT

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி விவசாயியிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் கோபுரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணுக்கு தங்கள் நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதாகவும், அதற்கு முன்பணமாக ரூ.40 லட்சம், மாத வாடகை ரூ.40 ஆயிரம் தருகிறோம் என்று குறுஞ்செய்தி வந்து உள்ளது.

உடனே அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்து உள்ளார். பின்னர் செல்போன் கோபுரம் அமைத்து கொடுப்பதற்கு நில ஆவணங்கள், ஆவண கட்டணம், சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று அந்த நபர் கூறி உள்ளார். இதையடுத்து ரத்தினவேல், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500 அனுப்பி உள்ளார். ஆனால் அந்த நபர் செல்போன் கோபுரம் அமைத்து கொடுக்கவில்லை.

விசாரணை

பின்னர் குறுஞ்செய்தி வந்த எண்ணை ரத்தினவேல் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இந்த மோசடி குறித்து அவர் சைபர்கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியிடம் பணம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்