'மோடி சோப்பு அனைத்து பாவங்களையும் நீக்கிவிடும்' - ப.சிதம்பரம் விமர்சனம்

மோடி சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும், பாவங்களும் நீங்கி புனிதமாகிவிடலாம் என ப.சிதம்பரம் விமர்சித்தார்.;

Update: 2024-03-31 04:34 GMT

சிவகங்கை,

ஊழல் குற்றச்சாட்டுகளை கொண்டவர்கள் மோடி சோப்பு பயன்படுத்துவதன் மூலம் பாவங்கள் நீங்கி சுத்தமாகி விடுவதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"பா.ஜ.க.வின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எந்த வழக்கும் கிடையாது, யாரும் சிறையிலும் இல்லை. பா.ஜ.க.வினர் அனைவரும் உத்தமர்கள், எதிர்கட்சியினர் எல்லோரும் அயோக்கியர்களா? இங்கிருந்து யாராவது அங்கு சென்றால் மோடி சோப்பு மூலம் சுத்தப்படுத்தி அவர்களை புனிதமாக்குகிறார்களே, அது எப்படி?

இந்தியாவிலேயே மிகப் பிரபலமாக அனைவரும் பயன்படுத்தும் சோப்பு மோடி சோப்புதான். அந்த சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும், பாவங்களும் நீங்கி புனிதமாகிவிடலாம்."

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்