விமர்சனத்தையே சகித்துக்கொள்ள முடியாத அரசாக மோடி அரசு மாறியுள்ளது: ப.சிதம்பரம் கடும் தாக்கு

அதிமுகவிற்கு சட்டாம் பிள்ளையே பாரதிய ஜனதா கட்சிதான். பாரதிய ஜனதா கட்சி எழு என்றால் எழுவார்கள். உட்கார் என்றார் உட்காருவார்கள் என்று சிதம்பரம் விமர்சித்தார்.

Update: 2023-02-19 03:28 GMT

 ஈரோடு,

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

நீங்க யாராவது மோடியை பற்றி குறும்படம் எடுத்து விமர்சித்தால் உங்கள் வீட்டிலும் ரெய்டு வரும். விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத அரசாக நரேந்திர மோடி அரசு உள்ளது. விமர்சனத்தையே சகித்துக்கொள்ள முடியாத அரசாட்சி நாடுகளின் வரிசையில் இந்தியா சேர்ந்து இருக்கிறது.

இதுவரை சீனா, ரஷ்யா, எகிப்து போன்ற நாடுகள்தான் அந்த வரிசையில் இருப்பதாக நினைத்தோம். இப்போது இந்தியாவும் அந்த வரிசையில் சேர்ந்து இருப்பதை உலகம் முழுவதும் அறிவித்து விட்டார்கள். மத்திய அரசு கொள்கை வேறு என்றால் அதிமுக ஏன் அங்கு இருக்கிறது. எந்த கொள்கையில் உடன்படுகிறீர்கள்.. எந்த கொள்கையில் வேறுபடுகிறீர்கள் என்று சொல்லட்டும் என இரண்டு கட்சியும் சொல்லட்டும் ஒத்துக்கொள்கிறேன். எல்லா கொள்கைகளிலும் உடன்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை

அதிமுகவிற்கு சட்டாம் பிள்ளையே பாரதிய ஜனதா கட்சிதான். பாரதிய ஜனதா கட்சி எழு என்றால் எழுவார்கள். உட்கார் என்றார் உட்காருவார்கள். மண்டியிடு என்றால் மண்டியிடுவார்கள். காலில் மல்லாந்து விழுந்து கும்பிடு என்றால் கும்பிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்