கொடைக்கானலில் நட்சத்திர ஏரியை சுற்றி நவீன வேலிகள்

கொடைக்கானலில் நட்சத்திர ஏரியை சுற்றி நவீன வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.;

Update: 2023-06-23 21:00 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் நகரின் மைய பகுதியான நட்சத்திர ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.24 கோடி செலவில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 4½ கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட ஏரியில் 3 இடங்களில் நீரூற்றுகள், ஏரியை சுற்றி 900 மின்விளக்குகள், புதிய படகுகள் வாங்குதல், படகு இல்லம் கட்டுதல், படகில் ஏறுவதற்கு நடைமேடை, ஏரியை சுற்றியுள்ள நடைமேடையில் கிரானைட் கற்கள் பதித்தல், ஏரியில் உள்ள தண்ணீரை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாக ஏரியை சுற்றி ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த வேலிகள் அகற்றப்பட்டு, புதிதாக நவீன முறையில் வேலிகள் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள நவீன வேலிகள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் நவீன வேலிகளை பார்த்து ரசித்து செல்கின்றனர். இதுபோன்ற அபிவிருத்தி பணிகள் முடிவடைந்ததும் நட்சத்திர ஏரி பகுதி வெளிநாட்டு தரத்துடன் சிறந்து விளங்கும் என்று எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஏரிச்சாலையில் சாலை அமைத்தல் மற்றும் பாலம் கட்டுதல் போன்ற பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்