மாநகராட்சி பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

மாநகராட்சி பள்ளிகளில் நவீன வகுப்பறைகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

Update: 2023-01-23 21:14 GMT


மதுரை திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா.நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கம்பர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி முன்னிலை வகித்தார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு, நவீன வகுப்பறைகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மண்டல தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாநகராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்