'மோக்கா' புயல் எதிரொலியாக; சென்னை உள்பட 6 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

‘மோக்கா’ புயல் எதிரொலியாக சென்னை உள்பட 6 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.;

Update: 2023-05-12 00:01 GMT

சென்னை,

வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக் கொண்டுள்ள 'மோக்கா' புயல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்து வருகிற 14-ந்தேதி காலை அந்த புயல் வங்கதேசத்தில் உள்ள காக்ஸ்பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடப்பதற்கு முன்பு அதிதீவிர புயல் சற்று வலு குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக நிபுணர்கள் கணித்து உள்ளனர். கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை துறை எச்சரித்து உள்ளது.

2-ம் எண் எச்சரிக்கை கூண்டு

வங்க கடலில் புயல் உருவானதை தொடர்ந்து மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க ெசல்ல வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புயல் எச்சரிக்கையை தெரிவிக்கும் வகையில் சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, கடலூர் மற்றும் நாகை உள்ளிட்ட 6 துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

இது புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதற்காக ஏற்றப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்றப்படுகிறது என்று துறைமுக அதிகாரிகள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்